Tuesday, July 29, 2008

கண்ணா மூச்சிவிளையாட்டு

சாண்டல்  கொஞ்சம் கொஞ்சமாக கண்ணா மூச்சி விளையாட்டு படிக்கிறாள். ஒன்று முதல் பத்து வரை எண்ணி விட்டு, நாம் அவளை தேட துவங்கும் முன் அவளே ஓடி வந்து விடுகிறாள். நான் சொல்லிக்கொடுக்க முயற்சி செய்தேன். அப்பா 'turn', சாண்டல் 'turn',  என்று சொல்லிக் கொள்வாள். சற்று நேரம் கழித்து புல்லில் இருக்கும் பூச்சிகளை பார்த்து பயந்து வீட்டிற்குள் ஓடி விடுவாள். அப்புறம் 'microscopeல்' பார்க்கலாம் என்று ஓடி வருவாள்.
நேற்று திடிரென்று போய் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டாள். 'Chantel is sad' என்று சொல்லி, மூக்கை உறிஞ்சினாள். என்னவென்று பார்த்தால், நடித்துக்கொண்டு இருந்திருக்கிறாள்! கார்ட்டூன் அல்லது மற்ற குழந்தைகளை பார்த்து செய்திருக்கிறாள்! 

No comments: